உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அருகே பசுமாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை

Update: 2022-08-18 10:30 GMT
  • கீழ்க்காத்தேரி ரேஷன் கடை எதிரில் மாடு இறந்து கிடந்தது.
  • 3 பசுமாடுகள் வளர்த்து வந்தனர்.

அரவேனு,

கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சின்னான். இவரது மனைவி செல்லம்மா. இவர்கள் 3 பசுமாடுகள் வளர்த்து வந்தனர்.

வழக்கமாக மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் மாலையில் வீடு திரும்பி விடும். ஆனால் 2 மாடுகள் மட்டுமே வீடு திரும்பி இருந்தது. ஒரு மாட்டை காணவில்லை.

மாட்டை தேடிச் சென்றபோது கீழ்க்காத்தேரி ரேஷன் கடை எதிரில் மாடு இறந்து கிடந்தது.

சிறுத்தைப்புலி தாக்கியதில் மாடு இறந்து இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

Tags:    

Similar News