உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

காவேரிப்பட்டிணம் அருகே குடிநீர் பிரச்சினை காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் -பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளாத பி.டி.ஓ.

Published On 2022-09-07 15:12 IST   |   Update On 2022-09-07 15:12:00 IST
  • குடிநீர் பிரச்சனை காரணமாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சாலை மறியலை கைவிட்டனர்.

காவேரிப்பட்டிணம், 

காவேரிப்பட்டணம் அருகே மலையண்ட அள்ளி கிராமம் உள்ளது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை குடிநீர் பிரச்சனை காரணமாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .

இதை அறிந்து காவேரிப்பட்டிணம் இன்ஸ்பெக்டர் முரளி சம்பவ இடத்துக்கு விரைந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சாலை மறியலை கைவிட்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது தற்போது மழை பெய்து அனைத்து கிணறுகளிலும் தண்ணீர் உள்ளது. ஆனால் குடிப்பதற்கு தண்ணீர் வருவதில்லை. குடிநீர் தட்டுப்பாடு குறித்து பலமுறை தலைவர் மற்றும் பி.டி.ஓ.விடம் மனு அளித்தும் அவர்கள் கண்டு கொள்வதே இல்லை. தண்ணீர் டேங்க் முழுவதும் சிதிலமடைந்து டேங்க் உடைந்தது.

தண்ணீர் டேங்க் உள்ளே சிமெண்ட் சிலாப்புக்கள் உள்ளன. மேலும் தண்ணீர் ஏற்றும்போது உள்ளே உள்ள கழிவுகளால் புழுக்கள் ஏற்பட்டு தண்ணீர் குடிப்பதற்கே முடியாமல் உள்ளது. உடனடியாக அதிகாரிகள் தண்ணீர் டேங்க் முழுவதையும் சுத்தப்படுத்திவிட்டு அதில் முறையாக சிமெண்ட் கலவை கொண்டு தண்ணீர் டேங்க் முழுவதும் பூசி எங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினர். 

Tags:    

Similar News