உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி வன்முறை சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது

Published On 2022-09-01 12:27 IST   |   Update On 2022-09-01 12:27:00 IST
  • கண்கா ணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சிகளைக் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழு வினர் விசா ரணை செய்து வருகின்றனர்.
  • கனியாமூர் வன்முறை சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொட ர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கண்கா ணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சிகளைக் கொண்டு சிறப்பு புலனா ய்வுக் குழு வினர் விசா ரணை செய்து வருகின்றனர். அதன்படி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் கனியாமூர் வன்முறை சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வளையமாதேவி பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் அஜித் (வயது 26) அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் அஜித் (22), மற்றும் சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஊனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி மகன் விஜயமணி (39) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News