கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்ட காட்சி.
கடத்தூர் அருகே ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா
- கொடியேற்றத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
- தீர்த்தக்குடம் முளைப்பாரி அழைத்தல் புதிய சுவாமி உருவ சிலை கறி கோள் உற்சவம் நி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் அருகே உள்ள பழைய புதுரெட்யூரில் ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி ஸ்ரீ வெங்கடேசபெருமாள் கோவில் நூதன ஆலய அஸ்தபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கடந்த 8-ந்தேதி விநாயகர் பூஜை விக்னேஸ்வரா பூஜை ஆகியவை தொடர்ந்து கொடியேற்றத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
ஞாயிற்றுக்கிழமை தீர்த்தக்குடம் முளைப்பாரி அழைத்தல் புதிய சுவாமி உருவ சிலை கறி கோள் உற்சவம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதை தொடர்ந்து அன்னதானமும் விமான கோபுர கலச வைத்தல் எந்திர ஸ்தாபனம் அஸ்தபந்தன மருந்து சாற்றுதல்நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று காலை மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கும்பாபிஷேக திரு விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.