உள்ளூர் செய்திகள்

மணல் அள்ளப்பட்ட இடம் பெரிய பள்ளமாக இருப்பதை படத்தில் காணலாம்.

கச்சிராயப்பாளையம் அருகே ஆறுகளில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் கொள்ளை

Published On 2022-08-16 08:28 GMT   |   Update On 2022-08-16 08:28 GMT
  • ஆறுகளில் இரவு நேரங் களில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிராவல் மண் மற்றும் செம்மண்ணை திருடிச் செல்கின்றனர்.
  • இதனை கண்டு ெகாள்ளாதது வேதனை அளிக்கிறது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்திற் குட்பட்ட வடக்கநந்தல், நயினார்பாளையம் என மூன்று வருவாய் வட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 70-க்கும் மேற் பட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் சின்ன சேலம் குறுவட்டத்திற்கு உட்பட்ட சின்னசேலம் தகரை கள்ளநத்தம், குரால், வடக்கநந்தல், மாத்தூர், மண்மலை கரடிசித்தூர் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆறுகளில் இரவு நேரங் களில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிராவல் மண் மற்றும் செம்மண்ணை திருடிச் செல்கின்றனர். மேலும் இந்த திருட்டு இரவு முதல் அதிகாலை வரை நடக்கிறது. இந்ததிருட்டை தடுக்க வேண்டிய வருவாய் துறையும் இதனை கண்டு ெகாள்ளாதது வேதனை அளிக்கிறது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் இதில் கவனம் செலுத்தி கிராவல் மண் மற்றும் செம்மண் போன்ற கனிம வளங்களை கொள்ளையடிப்பவர்கள் மீது கடுமையான ந டவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இந்த மணல் கொள்ளையை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீதும் தக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News