உள்ளூர் செய்திகள்
கண்காணிப்பு காமிராவில் பதிவான கரடி.
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி -காமிராவில் பதிவான காட்சியால் பொது மக்கள் பீதி
- கரடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளது.
- குடியிருப்பு மக்கள் மிகவும் பீதி அடைந்துள்ளனர்.
ஓசூர்,
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள ஆனேக்கல் தாலுக்கா ஜிகினியில், நந்தனவனா லேஅவுட் என்ற குடியிருப்பு பகுதியில் இரவு 10.30 மணியளவில் கரடி ஒன்று புகுந்தது.
கரடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளது. இதனால் குடியிருப்பு மக்கள் மிகவும் பீதி அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், கரடியை பிடித்துச் செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள னர். மேலும், குடியிருப்பு மக்களும், அந்த பகுதியில் நடமாடுபவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.