கல்லாவி அருகே 24 மணி நேரத்தில் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு
- குற்றவாளியை கோயமுத்தூரில் வைத்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
- சிறப்பாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் என டி.எஸ்.பி. அலெக்ஸாண்டர் பாராட்டியுள்ளார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முருகன். இவர் கல்லாவி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட செங்கல்பட்டி என்ற கிராமத்தில் தாய், மகன் ஆகிய இருவரும் ஜூலை 13.7.2022 அன்று நள்ளிரவு வீடு பூட்டப்பட்ட நிலையில் மர்ம நபர்களால் பெற்றோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் அப்போதிய டி.எஸ்.பி. அலெக்ஸாண்டர் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
அதில் தனிப்படை அதிகாரியாக செயல்பட்ட மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தனிப்படை போலீசாரின் உதவியுடன் கொலை சம்பந்தமாக இறந்தவர் களின் உறவினர்களுடன் நடத்திய தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது 24 மணி நேரத்தில் தாய் கமலா (50), மகன் குரு (17) ஆகிய இருவரையும் கள்ள காதல் விவகாரத்தில் பெட்ரோல் ஊற்றி கொலை செய்த குற்றவாளியான திருப்பத்தூர் மாவட்டம் குறிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ராமதாஸ் என்பவரை கோயமுத்தூரில் வைத்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
இதனால் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் என டி.எஸ்.பி. அலெக்ஸாண்டர் பாராட்டியுள்ளார்.
இந்த துரித நடவடிக்கையை பாராட்டி சுதந்திர தினத்தன்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகனை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளார்.