உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே வேலியில் சிக்கி தவித்த புள்ளி மான் மீட்பு

Published On 2022-06-29 09:49 GMT   |   Update On 2022-06-29 09:49 GMT
  • புள்ளிமான் நேற்று நெல்லு குந்தி கிராமத்தின் அருகே கம்பி வலையில் சிக்கியது.
  • தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சுற்றி உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் , மான்கள் அதிக அளவில் காணப்படுகிறது.

இந்த மான்கள் அவ்வபோது உணவை மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியிலிருந்து வெளியே வருவது வழக்கம்.

இந்நிலையில் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நெல்லுக்குத்தி கிராமத்தை அடுத்துள்ள வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீருக்காக வெளியேறிய புள்ளிமான் நேற்று நெல்லு குந்தி கிராமத்தின் அருகே கம்பி வலையில் சிக்கியது. படுகாயத்துடன் தவித்த மானை தெரு நாய்கள் கடித்து குதறி உள்ளது.

இதனை பார்த்த கிராம மக்கள் கம்பிவேலியில் சிக்கி தவித்த மானை மீட்டு தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலை அடுத்து தேன்கனிக்கோட்டை வனசரகர் முருகேசன், வனக்காவலர் ராம்குமார் மற்றும் வன ஊழியர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து இந்த புள்ளி மானை மீட்டு சிகிச்சை முடிந்து குணமடைந்த பின் வனப்பகுதியில் விடப்படும் என தெரிவித்தனர்.

Similar News