உள்ளூர் செய்திகள்

தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்திய லாரி கடத்தல்

Update: 2022-10-06 09:55 GMT
  • பென்னாகரம் மேம்பாலம் அருகில் லாரிகள் நிறுத்தும் இடத்தில் வண்டியை நிறுத்தியுள்ளார்.
  • இன்றுகாலை சென்று பார்க்கும் போது லாரி காணவில்லை

தருமபுரி,

தருமபுரி குமாரசாமி பேட்டை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் நேற்று லாரிக்கு பூஜை போட்டு பென்னாகரம் மேம்பாலம் அருகில் லாரிகள் நிறுத்தும் இடத்தில் வண்டியை நிறுத்தியுள்ளார்.

பின்னர் லாரியை பூட்டி விட்டு வீட்டிற்கு திரும்பினார். பின்னர் இன்றுகாலை சென்று பார்க்கும் போது லாரி காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News