உள்ளூர் செய்திகள்

சூளகிரி அருகே மின்வாரிய அலுவலக திருட்டுவழக்கில் வாலிபர் கைது

Published On 2022-09-23 15:15 IST   |   Update On 2022-09-23 15:15:00 IST
  • 2 மாதத்திற்கு முன்பு அலுவலகத்தில் அதிகாலை அலுவலகத்தில் பணியாற்றியவர்களை அறையில் அடைத்து வைத்து பல லட்சம் மதிக்கதக்க மின் உபகரணங்களை கொள்ளையர்கள் எடுத்து சென்றனர்.
  • 2 மாதங்களுக்கு பின்பு வழக்கில் உள்ள 16-வது கொள்ளையன் கெலமங்கலத்தை சேர்ந்த முனியய்யா மகன் செல்வ ராஜ் (வயது21) என்பவரை பேரிகை போலீசார் கைது செய்தனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா பேரிகை பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான மின் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் 2 மாதத்திற்கு முன்பு அலுவலகத்தில் அதிகாலை அலுவலகத்தில் பணியாற்றியவர்களை அறையில் அடைத்து வைத்து பல லட்சம் மதிக்கதக்க மின் உபகரணங்களை கொள்ளையர்கள் எடுத்து சென்றனர். இதை அறிந்த மின்பொறி யாளர் பேரிகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து தேடிவந்தநிலையில் 15 கொள்ளையர்களை பிடித்து சிறையில் அடைத்தனர்.

2 மாதங்களுக்கு பின்பு வழக்கில் உள்ள 16-வது கொள்ளையன் கெலமங்கலத்தை சேர்ந்த முனியய்யா மகன் செல்வ ராஜ் (வயது21) என்பவரை பேரிகை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News