உள்ளூர் செய்திகள்
சூளகிரி அருகே அனுமதி பெறாமல் துப்பாக்கி வைத்திருந்த விவசாயி சிக்கினார்
- துப்பாக்கியுடன் வேட்டையில் ஈடுபட முயன்ற ஒருவரை போலீசார் மடக்கி துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
- துப்பாக்கியை பயன்படுத்தி தொடர்ந்து வேட்டையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள வனப்பகுதிக்கு போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அனுமதி பெறாத நாட்டு துப்பாக்கியுடன் வேட்டையில் ஈடுபட முயன்ற ஒருவரை போலீசார் மடக்கி துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் சிட்டப்பா (வயது 48) என்ற கூலி தொழிலாளியாகிய அவர் இந்த துப்பாக்கியை பயன்படுத்தி தொடர்ந்து வேட்டையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.