உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

11-ந்தேதி நடக்கிறது தேனி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

Published On 2023-02-01 04:32 GMT   |   Update On 2023-02-01 04:32 GMT
  • தேனி மாவட்டத்தில் வருகிற 11-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வளாகத்திலும் நடத்தப்பட உள்ளது.
  • நேரடியாக வழக்காடிகள் பங்கேற்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குபிரச்சினைகளை சமாதான மாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

தேனி:

தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய்பாபா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி தேனி, பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடி வட்டசட்டபணிகள் குழுவில் வருகிற 11-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வளாகத்திலும் நடத்தப்பட உள்ளது.

நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு வக்கீல் உறுப்பினர் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடைபெறும் .இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், சொத்து மற்றும் பணம் சம்பந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள், சமாதானம் செய்யக்கூடிய குற்றவழக்குகள், ஜீவனாம்சம்,

நில ஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நலன் இழப்பீடு வழக்குகள், கல்விக்கடன், வங்கிக்கடன், சம்பந்தமான வழக்குகள், குடும்ப வன்முறை சட்டவழக்கு, காசோலை வழக்கு, நுகர்வோர் வழக்குகள், வருவாய் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் இதர பொதுபயன்பாட்டு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

நேரடியாக வழக்காடிகள் பங்கேற்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குபிரச்சினைகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே வருகிற 11-ந்தேதி நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் அணுகி பயன்அடையலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News