ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
- மாணவர்கள் விடா முயற்சியுடன் தொடர்ந்து போராடி வெற்றி பெற வேண்டும்.
- 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியில், கணினி அறிவியல் துறை சார்பில் "கம்ப்யூட்எஃஸ் -2கே23" என்ற தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ரங்கநாத் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி வைத்து விழாவில் பேசுகையில், மாணவர்கள் விடா முயற்சியுடன் தொடர்ந்து போராடி வெற்றி பெற வேண்டும். சந்திராயன்- 2 தோல்வியை கண்டாலும், நம் விஞ்ஞானிகள் தொடர்ந்து போராடி சந்திராயன்- 3 ஐ வெற்றிபெற வைத்தது போல், மாணவர்கள் அனை வரும் தோல்வியை கண்டு துவளாமல் தொடர்ந்து போராடி வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்று கூறினார்.
முன்னதாக, கணினி அறிவியல் துறை தலைவர் பாத்திமா வரவேற்றார். பேராசிரியை விஜயலட்சுமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். உதவி பேராசிரியை கலை வாணி, கருத்தரங்கின் முழுமையான நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.
இதில், சிறப்பு விருந்தினராக, ஷ்னீதெர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு வடிவமைப்பாளர் பாலு வெங்கடேஷ் கலந்து கொண்டு, மாணவர்களின் எதிர் காலத்தை ஊக்கப் படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டின் முக்கியத்து வம் குறித்து மாணவர்களிடம் விளக்கி பேசினார்.
கருத்தரங்கில் கணினி அறிவியல் துறை பேராசிரி யர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பல்வேறு கல்லூரி களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர் கலந்து கொண்டனர்.
முடிவில், ஒருங்கிணைப் பாளர் விக்ரம் நன்றி கூறினார்.