வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டி தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை
- பெங்களூரு ஏ.சி.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய அளவிலான ஸ்மார்ட் இண்டியா ஹேக்க த்தான் போட்டி நடை பெற்றது.
- இறுதி போட்டியில் நாடார் சரஸ்வதி கல்லூரி மாணவர்கள் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
தேனி:
பெங்களூரு ஏ.சி.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய அளவிலான ஸ்மார்ட் இண்டியா ஹேக்க த்தான் போட்டி நடை பெற்றது. தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழி ல்நுட்ப கவுன்சில் துணை த்தலைவர் மயில்சாமி அண்ணாத்துரை தலைமை தாங்கினார். இதில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்டன.
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி உள்பட 4 கல்லூரிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதி போட்டியில் நாடார் சரஸ்வதி கல்லூரி மாணவர்கள் சரவணன், ஹரிபிரசாத், ரேவந்த், சாருமதி, பிரியங்கா, கவிதா ஆகியோர் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
அவர்களுக்கு விஞ்ஞானி குணசேகரன் ரூ.1 லட்சம் வழங்கினார். கணினி மற்றும் அறிவியல் துறை தலைவர் மதளைராஜ், தகவல் மற்றும் தொழி ல்நுட்பத்துறை தலைவர் விக்னேஷ், பேராசிரியர் சோலைராஜ், பேராசிரியை ெபரின்ஜெபா சிங்கிள் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டி னர்.
மாணவ-மாணவிகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், கல்லூ ரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம், கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர் மாதவன், வேலை வாய்ப்புத்துறை அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.