உள்ளூர் செய்திகள்

நிலக்கடலையின் தரம் குறித்து ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும்

Published On 2023-08-10 15:06 IST   |   Update On 2023-08-10 15:06:00 IST
  • விதைச்சான்று அலுவலர்கள் மூலம் வயலாய்வு செய்யப்பட்டு வயல் தரங்கள் உறுதி
  • விதை சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்தி செய்யப்பட்டு விதை மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படுகின்றன.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் சான்றளிப்பு செய்யப்பட்ட நிலக்கடலை மற்றும் உளுந்து ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

வயல் ஆய்வு

தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை மூலமாக விதைச்சான்ற ளிப்பில் பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணையில் விதைச்சான்று அலுவலர்கள் மூலம் வயலாய்வு செய்யப்பட்டு வயல் தரங்கள் உறுதி செய்யப்படுகின்றன.

வயல்தரங்களில் தேறிய விதைப்பண்ணைகளில் அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள் முறை யாக கடைப்பிடிக்கப்பட்டு அந்த வயல்மட்ட விதைகளை அரசு அங்கீகரிக்கப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்தி செய்யப்பட்டு விதை மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படுகின்றன.

சான்று

பகுப்பாய்வில் விதைத்தரம் தேறிய விதை கள் சான்று செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப் படுகின்றன.

சான்று பெற்ற விதைகளில் ஆதாரநிலை விதைகளுக்கு வெள்ளை நிறச்சான்றட்டையும் சான்று விதைகளுக்கு நீல நிற அட்டையும் பொருத்தப் படுகிறது.

மேலும் சான்று பெற்ற விதைகளில் வெள்ளை நிற அல்லது நீல நிற அட்டையுடன் ஒரு பச்சைநிற உற்பத்தியாளர் அட்டையும் கட்டப்பட்டிருக்கும். இதைக் கொண்டு சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் எளிதாகக் கண்டறியலாம்.

சான்று பெற்ற விதைகள் அதிக புறத்தூய்மை, அதிக இனத்தூய்மை, அதிக முளைப்புத்திறன், அளவான ஈரப்பதம் போன்ற குணநலன்களை கொண்டிருக்கும்.

எனவே, விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை வாங்கி பயிரிட்டு அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம் என விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், சித்திரைசெல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News