ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற காலை உணவு திட்டம் தொடக்க நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர்
டாக்டர்.மதிவேந்தன் மாணவ-மாணவிகளுடன் காலை உணவு சாப்பிட்டார். அருகில்
கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., கலெக்டர் டாக்டர். உமா உள்பட பலர் உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 772 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- இத்திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 70 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ராசிபுரம்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 70 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூ ராட்சி பகுதிகளில் உள்ள
772 பள்ளிகளில் இத்திட்ட மானது விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 35,544 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டம் இதன் தொடக்க விழா ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துகாளிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த னர். பின்னர் பள்ளியில் பயிலும் 42 மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 842 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 41 ஆயிரத்து 129 மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
இந்த நிகழச்சியில் ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், மாவட்ட பொருளாளர் ஏ.கே.பாலசந்திரன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் அரங்கசாமி, முத்துகாளிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் அருண், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.