உள்ளூர் செய்திகள்
விவசாயிகளுக்கு நெல் விதைகள் வழங்கல்
- 50 சதவீதம் மானியத்தில் பாரம்பரிய விதை நெல் ரகங்களான செங்கல்பட்டு சிறுமணி, தூயமல்லி, ஆகிய விதை நெல் ரகங்கள் 1 கிலோ ரூ.25 என்ற வீதத்தில் வழங்கப்படுகிறது.
பரமத்தி வேலூர்:
பரமத்தி வட்டாரத்தில் நெல் ஜெயராமனின் மரபு சார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் பாரம்பரிய விதை நெல் ரகங்களான செங்கல்பட்டு சிறுமணி, தூயமல்லி, ஆகிய விதை நெல் ரகங்கள் 1 கிலோ ரூ.25 என்ற வீதத்தில் வழங்கப்படுகிறது.
இத்தகைய மரபுசார் நெல் ரகங்களைத் திரட்டி, பலமடங்காக பெருக்கி, விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகள், அதிகபட்சமாக 20 கிலோ மட்டுமே என்ற அடிப்படையில் விநியோகிக்கப்படும்விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் மானிய விலையில் வாங்கி பயன் பெறுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.