உள்ளூர் செய்திகள்

ஜேடர்பாளையம் அருகே கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் விவேகானந்தனிடம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கிய போது எடுத்த படம்.

ஜேடர்பாளையம் அருகே கொலை, வன்முறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி

Published On 2023-09-10 07:25 GMT   |   Update On 2023-09-10 07:25 GMT
  • ஜேடர்பாளையம் கரப்பாளை யத்தை சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
  • இந்த வழக்கு தொடர்பாக அப்பகுதியில் செயல்பட்டு வந்த கரும்பு ஆலையில் பணியாற்றிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் கரப்பாளை யத்தை சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அப்பகுதியில் செயல்பட்டு வந்த கரும்பு ஆலையில் பணியாற்றிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

இதனை தொடர்ந்து புதுப்பாளையத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். தொடர் வன்முறையால் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அதே பகுதியை சேர்ந்த விவசாயிகளின் தோட்டத்தில் பாக்குமரங்கள், வாழை மரங்கள், மரவள்ளி பயிர்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.

நிவாரண உதவி

இந்த நிலையில் கொலை யுண்ட இளம்பெண் குடும்பத்தாருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிவாரண தொகையை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் கலெக்டர் டாக்டர் உமா ஆகியோர் கபிலர்மலை யூனியன் அலுவலகத்தில் வழங்கினார்கள்.

மேலும் அவரது 2 குழந்தைகளுக்கு வருங்கால வைப்பு நிதியாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்கள். வாழை, பாக்கு மரம் மற்றும் டிராக்டர் எரித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் எம்.பி. சின்ராஜ், தி.மு.க. நாமக்கல் மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. சுகந்தி, கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராஜ், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரிஜா, புஷ்பராஜன், பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி, பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் டாக்டர்.சோமசேகர், துணைத்தலைவர் முருகவேல், பிலிக்கல் பாளையம் ஊராட்சி தலைவர் மணிமேகலை லோகநாதன், அ. குன்னத்தூர் ஊராட்சி தலைவர் எம்.ஜி.ஆர் என்கிற ரமேஷ், ஆனங்கூர் ஊராட்சி தலைவர் மோகன்ராஜ், வடகரையாத்தூர் ஊராட்சி தலைவர் மஞ்சுளா குணசேகரன் மற்றும் ஊராட்சி செயலர்கள் சசிகுமார், பொன்னுவேல், ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News