உள்ளூர் செய்திகள்

கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைத்திருந்த போது எடுத்த படம்.

பரமத்தி வேலூரில் நவராத்திரி முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை

Published On 2023-10-10 09:38 GMT   |   Update On 2023-10-10 09:38 GMT
  • நவராத்திரி விழாவை முன்னிட்டு பரமத்தி வேலூரில் கொலு பொம்மைகள் விற்கப்படுகிறது. ஒரு பொம்மை ரூ.60 முதல் ரூ.750 வரை விற்கப்படுகிறது.
  • மேலும் பலவிதமான சாமி பொம்மைகள், விலங்குகள், மனிதர்கள் கொலு பொம்மைகள் வைப்பது வழக்கம்.

பரமத்திவேலூர்:

நவராத்திரி விழாவை முன்னிட்டு பரமத்தி வேலூரில் கொலு பொம்மைகள் விற்கப்படுகிறது. ஒரு பொம்மை ரூ.60 முதல் ரூ.750 வரை விற்கப்படுகிறது.

வருகிற 15-ந் தேதி நவராத்திரி விழா தொடங்க உள்ளது. நவராத்திரி விழாவில் கொலு பொம்மைகள் முக்கிய பங்கு வகிக்கும். நவராத்திரி அன்று அம்மன் சன்னதிகளிலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் 9 படிகள் அமைத்து பல விதமாக சாமி பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதே கொலுவாகும். மேலும் பலவிதமான சாமி பொம்மைகள், விலங்குகள், மனிதர்கள் கொலு பொம்மைகள் வைப்பது வழக்கம்.

பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் கொலு பொம்மை கடைகளில் கொலு பொம்மை விற்பனை சூடு பிடித்துள்ளது. இதுகுறித்து கொலு பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளி கூறுகையில், கொலு பொம்மைகளை களிமண்ணாலும், காகிதகூழ் மூலமாகவும் தயாரித்து விற்பனை செய்கிறோம். சாய்பாபா, லட்சுமி, கிருஷ்ணர், ராமர், சரஸ்வதி, சீதை, விநாயகர் என 50-க்கும் மேற்பட்ட சாமி பொம்மைகள் விற்பனைக்கு வைத்துள்ளோம். இந்த பொம்மைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என கூறினார்.

Tags:    

Similar News