உள்ளூர் செய்திகள்
பரமத்திவேலூரில் நள்ளிரவில் வாகன சோதனை மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்
- நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் மேலப்பட்டி - வசந்தபுரம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அதிகாரிகள் லாரியை சோதனை செய்தபோது, அதில் அரசு அனுமதி இன்றி மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச்செல்வி தலைமையில் நல்லூர் ஆர்.ஐ மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் மேலப்பட்டி - வசந்தபுரம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். இதையடுத்து டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிஓடி விட்டார்.
அதிகாரிகள் லாரியை சோதனை செய்தபோது, அதில் அரசு அனுமதி இன்றி மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து மேல்சாத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் கீதா, நல்லூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து, மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.