உள்ளூர் செய்திகள்

கடைகளை குறி வைத்து தொடர்திருட்டு-வியாபாரிகள் அச்சம்

Published On 2023-07-19 13:15 IST   |   Update On 2023-07-19 13:15:00 IST
  • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பை-பாஸ் சாலை நான்கு ரோட்டில் தேவி பேக்கரி கடை உள்ளது. அ
  • அருகில் இருந்த கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த 7 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பை-பாஸ் சாலை நான்கு ரோட்டில் தேவி பேக்கரி கடை உள்ளது. அதன் உரிமையாளர் வழக்கம்போல் இரவு கடையை 10 மணிக்கு மூடிவிட்டு சென்றுள்ளார்.அதிகாலை 2 மணிக்கு மோட்டார் சைக்கில் வந்த 2 மர்மநபர்கள் கடையின் முன்பு நோட்டமிட்டு, சட்டரை உடைத்து உள்ளே இருந்த 12 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். அதேபோல் அருகில் இருந்த கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த 7 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர். திருவள்ளுவர் சிலை அருகே உள்ள மளிகை கடையில் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். முடியாமல் போனதால், பைபாஸ் சாலையில் உள்ள பர்னிச்சர் கடையில் பூட்டை உடைத்து திருடி சென்றுள்ளனர். மேலும் அங்கு பதிவாகியிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவை வைத்து மர்ம நபர்களை பரமத்திவேலூர் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரே இரவில் நடந்துள்ளது. அதிகாலையில் குறி வைத்து மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடும் சம்பவத்தால் வியாபாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ரோந்து பணியை போலீசார் தீவிர படுத்த வேண்டும் என கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News