உள்ளூர் செய்திகள்

அத்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

அத்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு

Published On 2023-11-25 14:46 IST   |   Update On 2023-11-25 14:46:00 IST
  • அத்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீரென்று ஆய்வு செய்தார்.
  • இந்த ஆய்வின் போது மாணவ, மாணவிகளிடம் வழங்கப்படும் மதிய உணவு, ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை பற்றி கேட்டறிந்தார்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீரென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாணவ, மாணவிகளிடம் வழங்கப்படும் மதிய உணவு, ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை பற்றி கேட்டறிந்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பள்ளிக்குத் தேவையான குறைகளையும் நிறைகளையும் கேட்டறிந்தார். அப்போது பள்ளியில் கழிப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்துள்ளதாகவும் அதற்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேரூராட்சி மூலமாக கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News