உள்ளூர் செய்திகள்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தேர்த் திருவிழா 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2023-03-17 07:15 GMT   |   Update On 2023-03-17 07:15 GMT
  • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் பங்குனி தேர்த் திருவிழா வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
  • ஏப்ரல் 1-ந் தேதி கருட வாகனம், 2-ந் தேதி சேச வாகனம், 3-ந் தேதி யானை வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகின்றன.

நாமக்கல்:

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தேர்த் திருவிழா நடைபெறும்.

அதன்படி நடப்பாண்டில் பங்குனி தேர்த் திருவிழா வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 30-ந் தேதி பல்லக்கு புறப்பாடு, சிம்ம வாகனத்தில் சாமி வீதியுலா, 31-ந் தேதி அனுமந்த வாகனம், ஏப்ரல் 1-ந் தேதி கருட வாகனம், 2-ந் தேதி சேச வாகனம், 3-ந் தேதி யானை வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகின்றன.

4-ந் தேதி 10 மணிக்கு நரசிம்மர் நாமகிரி தாயார் திருக்கல்யாணம், 5-ந் தேதி குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு, திருவேடு பரி உற்சவம் நடைபெறுகிறது. 6-ந் தேதி காலை 8.30 மணிக்கு நரசிம்மர் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. பிற்பகல் 4.30 மணிக்கு அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது.

7-ந் தேதி சப்த வர்ணம் கஜலட்சுமி வாகனம் வீதி உலா, 8-ந் தேதி வசந்த உற்சவம், 9-ந் தேதி விடையாட்சி உற்சவம், 10-ம் தேதி புஷ்ப பல்லக்கு, 11-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும் 12-ந் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News