விவசாயி சின்னத்தில் ஒருமுறை கை வை, மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.. சீமான் பேச்சால் தொண்டர்கள் உற்சாகம்
- குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போராடும் மக்களை நாம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
காஞ்சிபுரம்:
குன்றத்தூர் - பல்லாவரம் சாலை விரிவாக்க பணிக்காக குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கரைமாநகர் பகுதியில் சாலையோரம் உள்ள குடியிருப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதி மக்களை நாம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மூதாட்டி ஒருவரை அணைத்து ஆறுதல் கூறிய சீமான், 'விவசாயி சின்னத்தில் ஒருமுறை கை வையுங்கள்.. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றார். அப்போது கட்சியினர் உற்சாக குரல் எழுப்பி, ஆரவாரம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், அனைத்து வளங்களையும் கொண்ட தமிழகத்தின் இரண்டு மாவட்டங்கள் அளவு கொண்ட சிங்கப்பூரிடம் முதலீட்டாளர்களை கேட்பது தமிழகத்தையும் இனத்தையும் அவமதிக்கும் செயல் என்றார்.