உள்ளூர் செய்திகள்

போத்தனூரில் இரவில் வீட்டுக்குள் புகுந்து நோட்டமிடும் மர்ம நபர்

Published On 2022-06-08 15:05 IST   |   Update On 2022-06-08 15:05:00 IST
  • சி.சி.டி.வி காட்சியால் பொதுமக்கள் பீதி
  • அதிகாலை 3 மணியளவில் முன்புற கேட்டை திறந்து வாலிபர் ஒருவர் உள்ளே நுழைகிறார்.

கோவை,

கோவை போத்தனூரில் மோகன்நகர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள ஒரு வீட்டில் வீட்டு உரிமையாளர் சி.சி.டி.வி காட்சிகளை இன்று எதேச்சையாக பார்த்தார். அப்போது அதில் அதிகாலை 3 மணியளவில் வீட்டு வளாகத்தில் முன்புற கேட்டை திறந்து வாலிபர் ஒருவர் உள்ளே நுழைகிறார்.

பார்ப்பதற்கு அவர் வட மாநில வாலிபர் போல் உள்ளார். அங்கு அவர் திருடுவதற்கு நோட்டமிட்டு உள்ளார். நாய் குறைக்கும் சத்தம் கேட்டதால் அவர் அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் எந்த பொருளையும் அவர் திருடி செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருட்டு, கொள்ளை சம்பவம் நடைபெறுவதற்கு முன் இரவில் உலா வரும் மர்ம நபரை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

Tags:    

Similar News