உள்ளூர் செய்திகள்

மாயமான மருந்து விற்பனை பிரதிநிதி ஏரியில் பிணமாக மீட்பு

Published On 2023-02-10 15:20 IST   |   Update On 2023-02-10 15:20:00 IST
  • வீராணம் ஏரியில் ஆண் பிணம்
  • முதற்கட்ட விசாரணையில் குருமூர்த்தி சமீபத்தில் புதிதாக வீடு கட்டி இருப்பதும் அதற்காக சில நபர்களிடம் கந்து வட்டிக்கு பணம் கடன்

சேலம்:

சேலம் தாதகாப்பட்டி திருஞானம் நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 37). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்க்கும் இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கவுரி (30) என்ற பெண்ணுடன் திருமணமாகி பிரணவ், ரித்திகா ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று காலையில் கவுரி, சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் தனது கணவர் குருமூர்த்தி தனது குழந்தை பிரணவ்வை பள்ளியில் விட்டு விட்டு வருவதாக கூறிச் சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. மாயாயமான தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்தார்.இதையடுத்து இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை தேடி வந்த நிலையில் இன்று காலை வீராணம் ஏரியில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக வீராணம் ேபாலீசாருக்கு தகவல் வந்தது.இதனை தொடர்ந்து வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏரியில் இருந்து உடலை மீட்டு பார்த்தபோது சட்டைப் பையில் இருந்து ஆதார் அட்டையில் பெயர் குருமூர்த்தி மற்றும் முகவரி இடம்பெற்றிருந்தது.இது குறித்து வீராணம் போலீசார், உடனடியாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.குருமூர்த்தியின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உறவினர்கள் அங்கு வந்து பார்த்து இறந்தது மாயமான குருமூர்த்தி என உறுதி செய்தனர். அதை தொடர்ந்து போலீசார் குருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குருமூர்த்தி சமீபத்தில் புதிதாக வீடு கட்டி இருப்பதும் அதற்காக சில நபர்களிடம் கந்து வட்டிக்கு பணம் கடன் வாங்கியதும் அதை கட்ட முடியாமல் கடும் மன உளைச்சலில் தனது மனைவியிடம் கடந்த ஒரு வாரமாக புலம்பி வந்ததும், அதனால் குருமூர்த்தி ஏரியில் குதித்து தற்கொலை செய்து இருப்பதும் தெரிய வந்தது.குருமூர்த்தி வீட்டிலிருந்து ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் சம்பவ இடத்தின் அருகில் எங்கும் இல்லாததால் இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே குருமூர்த்தி எப்படி இறந்தார்? என முழு விபரங்களும் தெரிய வரும்.

Tags:    

Similar News