உள்ளூர் செய்திகள்
முத்துராயசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா
- வனப்பகுதியில் உள்ள முத்துராயசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- முத்தப்பசுவாமிகள் கோவி லை சுற்றி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, சந்தனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜார்கலட்டி கிராமத்தையொட்டி வனப்பகுதியில் உள்ள முத்துராயசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி, கங்கா பூஜை, கோபூஜை, கணபதி ஓமம் நடைபெற்றது. திப்பசந்திரம் கிராமத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.
மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். புலிவாகனத்தின் மீது அமர்ந்து முத்தப்பசுவாமிகள் கோவி லை சுற்றி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவில் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.