உள்ளூர் செய்திகள்

பல்லடம் அங்காளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

Published On 2023-02-20 11:16 IST   |   Update On 2023-02-20 11:16:00 IST
  • மகாசிவராத்திரி, மயான பூஜை, சக்தி விந்தை அலகு தரிசனம், மாவிளக்கு நடைபெற்றது.
  • ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு,மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

பல்லடம் :

பல்லடத்தில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவில் 48வது குண்டம் திருவிழா கடந்த 17-ந் ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் துவங்கியது. தொடர்ந்து கொடியேற்றம், யாகசாலை பூஜை, மகாசிவராத்திரி, மயான பூஜை, சக்தி விந்தை அலகு தரிசனம், மாவிளக்கு நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்று மாலை அக்னி குண்டம் வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது 2 அடி அகலம்,45 அடி நீளம் கொண்ட குண்டத்தில்,வேப்பமரங்களை போட்டு அக்னி வளர்க்கப்பட்டது.சுமார் 10 மணி நேரம் அக்னி வளர்த்து குண்டம் தயார் செய்யப்பட்டது. இதில் இன்று காலை 7 மணிமுதல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் கோவில் பூசாரிகள்,மற்றும் நிர்வாகிகள் குண்டத்தில் இறங்கினர்.

பின்னர் ஓம்சக்தி,பாரசக்தி என்று கோஷமிட்டபடி கைகுழந்தைகளுடன் பெண்கள், சிறுவர்கள், உள்பட ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி அங்காளம்மனை வழிபட்டனர். பின்னர் காலை 8 மணிக்கு அக்னி அபிஷேகம்,பொங்கல் வைத்தல்,பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.

குண்டம் திருவிழாவை முன்னிட்டு முப்பெரும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் அன்னதானம் வழங்கினர். குண்டம் திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு,,மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். பல்லடம் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

Tags:    

Similar News