உள்ளூர் செய்திகள்

கடத்தூரில் உள்ள சாலையின் நடுவே ஆபத்தான பள்ளம் ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

கடத்தூரில் ஆபத்தான பள்ளத்தால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்

Published On 2023-09-06 15:33 IST   |   Update On 2023-09-06 15:33:00 IST
  • கேபிள் பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழி முறையாக மூடப்படாத நிலையில் உள்ளது.
  • பள்ளத்தை சீர் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடத்தூர், 

தருமபுரி மாவட்டம் கடத்தூரில் உள்ள விநாயகர் கோவில் அருகில் தனியார் கேபிள் பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழி முறையாக மூடப்படாத நிலையில் உள்ளது. மேலும், தற்போது சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அந்த பள்ளம் பெரிய பள்ளமாக ஏற்பட்டுள்ளது.

ஆபத்தான அந்த வளைவில் உள்ள இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றது. அந்த குழியால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இரவு நேரங்களில் இந்த ஆபத்தான சாலையில் அதிவேகமாக வாக–னங்களில் செல்பவர்கள் காயமடைந்து உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலையும் உருவாகி வருகிறது. எனவே, இந்த சாலையை முறையாக பராமரித்து பள்ளத்தை சீர் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News