உள்ளூர் செய்திகள்

சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கிகொண்ட மினி லாரியை படத்தில் காணலாம்.


செங்கோட்டை அருகே தொடர் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி - தரமான சாலை அமைக்க கோரிக்கை

Published On 2022-10-21 08:57 GMT   |   Update On 2022-10-21 08:57 GMT
  • செங்கோட்டை வழியாக கேரளாவிற்கு செல்லும் முக்கிய சாலையாக திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திகழ்கிறது.
  • பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

செங்கோட்டை:

செங்கோட்டை வழியாக கேரளாவிற்கு செல்லும் முக்கிய சாலையாக திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திகழ்கிறது.

கேரளாவிற்கு காய்கறிகள், உணவு பொருட்கள் உள்பட சரக்குகளை ஏற்றிக்கொண்டு நாள்தோறும் நூற்றுக் கணக்கான லாரிகள், கனரக வாகனங்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான வாக னங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் செங்கோட்டை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அலுவலகம் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள தொடர் பள்ளங்கலால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இப்பகுதியில் பருவமழை பெய்து வருவதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

அவ்வப்போது அதிகாரி கள் பள்ளங்களை சரி செய்வதும் பின் மீண்டும் அதே இடத்தில் பள்ளம் ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது. எனவே இங்கு தரமான சாலை அமைத்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News