உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள காட்சி.

பண்ருட்டியில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2022-12-28 07:17 GMT   |   Update On 2022-12-28 07:17 GMT
  • மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு பெய்யும் மாதமாகும்.
  • தேசியநெடுஞ்சாலையில் கடுமையான பனி காணப்பட்டதால் சாலைகள் தெரியாதபடி இருந்தது.

கடலூர்:

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை அவ்வப்போது பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் முதல் பலத்த மழை பெய்து வருவதால் இங்குள்ள ஆறு, குளம், ஏரி, கண்மாய்கள், ஊருணிகள் நிரம்பி வழிகிறது. பொதுவாக ஆண்டுதோறும் மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு பெய்யும் மாதமாகும். ஆனால் இந்தாண்டு முன்கூட்டியேகடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது.

பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த மாதம் தொடங்கிய இந்த பனிப்பொழிவு தொடக்கத்தில் மிதமான நிலையில் இருந்தது. அடுத்து படிப்படியாக பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. வாகன ஓட்டிகள் அவதி கடந்த சில தினங்களாக இரவு 7 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு விடிய, விடிய கடுமையாக உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டிற்குள் முடங்கிய நிலையில் உள்ளனர். இன்று வழக்கம் போல் பனிப்பொழிவு காணப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பண்ருட்டிவழியாக தேசியநெடுஞ்சாலை யில் கடுமையான பனி காணப்பட்டதால் சாலைகள் தெரியாதபடி இருந்தது. இதனால் இந்த சாலைகளில் சென்ற வாகனங்கள் மிதமான வேகத்தில் வாகனத்தில் உள்ள முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஹாரன் அடித்துக்கொண்டு ஊர்ந்து சென்றது.

Tags:    

Similar News