உள்ளூர் செய்திகள்

ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்திய போலீசார்

டவுன் ஆர்ச் அருகே சாலையில் கொட்டி கிடந்த ஜல்லிக்கற்களால் வாகன ஓட்டிகள் அவதி - போக்குவரத்து போலீசார் உடனடியாக சீரமைத்தனர்

Published On 2023-02-02 09:14 GMT   |   Update On 2023-02-02 09:14 GMT
  • நெல்லை டவுன் ஆர்ச் பகுதியில இருந்து எஸ்.என்.ஹை ரோட்டில் இன்று காலை ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது.
  • டவுன் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாஸ், தலைமை காவலர்கள் சுரேஷ்குமார், ரத்தினகுமார் ஆகியோர் தூய்மை பணியாளர்களின் உதவியுடன் ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

நெல்லை:

நெல்லை டவுன் ஆர்ச்் பகுதியில இருந்து எஸ்.என்.ஹை ரோட்டில் இன்று காலை ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது.

சாலையில் கற்கள்

சாலையில் இருந்த மேடு பள்ளம் காரணமாக அந்த லாரியில் இருந்து கற்கள் விழுந்து சாலையில் சிதறி கிடந்தன.

இதன் காரணமாக இன்று காலை இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக சென்றவர்கள் சிலர்் வழுக்கி விழுந்து விட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு காயம்் ஏதும்் ஏற்படவில்லை.

உயிர் விபத்துக்கள் ஏற்படும் முன்னர் சாலையில் கிடக்கும் ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

உடனடியாக அங்கு பணியில் இருந்த டவுன் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாஸ், தலைமை காவலர்கள் சுரேஷ்குமார், ரத்தினகுமார் ஆகியோர் தூய்மை பணியாளர்களின் உதவியுடன் ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Tags:    

Similar News