உள்ளூர் செய்திகள்
குமாரபாளையத்தில் தாய்-மகள் மாயம்
- குமாரபாளையம் கோட்டைமேடு தவடபாடி பகுதியில் வசிப்பவர்கள் அம்மாசி கூலி வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல வேலைக்கு சென்ற அம்மாசி மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்தார்.
- இது குறித்து அம்மாசி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார், விஜய், ராதாவை தேடி வருகின்றனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் கோட்டைமேடு தவடபாடி பகுதியில் வசிப்பவர்கள் அம்மாசி(வயது 47. இவரது மனைவி ராதா(34). இவர்க ளுக்கு கனிஷ்கா என்ற 7 வயது மகள் உள்ளார். அம்மாசி கூலி வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல வேலைக்கு சென்ற அம்மாசி மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்தார்.
அப்போது ராதா, கனிஷ்கா இருவரையும் காணவில்லை. இவர்கள் சமீபத்தில் வீட்டின் அருகே டெல்லியில் இருந்து வந்த விஜய்(27) என்பவருடன் சென்றதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூறினார்கள். இது குறித்து அம்மாசி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார், விஜய், ராதாவை தேடி வருகின்றனர்.