உள்ளூர் செய்திகள்

பருவமழைக்கான கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பார்வையிட்ட போது எடுத்த படம்.

செஞ்சியில் பருவமழைக்கான கட்டுப்பாட்டு மையம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு

Published On 2023-12-04 07:23 GMT   |   Update On 2023-12-04 07:23 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கடலோரப் பகுதியில் மிக் ஜாம் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால்கடந்த சில தினங்களாக செஞ்சி தொகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக செஞ்சி,மேல்மலையனூர், வல்லம், ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் புயல், வெள்ளம், மற்றும் கனமழை எச்சரிக்கை யொட்டி ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.மேலும் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மிக் ஜாம்புயல் காரணமாக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, மின்சாரத்துறை, பேரூராட்சி துறை, தீயணைப்பு காவல் துறையினர், உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறைஅமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

அப்போது செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை வடகிழக்கு பருவமழைக்கான கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் செஞ்சி ஒன்றிய குழுதலைவர் விஜயகுமார்,தாசில்தார் ஏழுமலை,கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, தொண்டரணி பாஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News