உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல்லில் மாயமான 4 பள்ளி மாணவிகள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

Published On 2022-11-15 11:21 IST   |   Update On 2022-11-15 11:21:00 IST
  • மாயமான 4 பள்ளி மாணவிகளை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
  • கரூரில் இருந்த மாணவிகளை போலீசார் மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள மகளிர் பள்ளியில் செல்லாண்டி யம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 2 மாணவிகள், நந்தவனப்பட்டி, சென்ன மநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவிகள் என 4 பேரும் 8ம் வகுப்பு படித்து வந்தனர். நெருங்கிய தோழிகளான இவர்கள் 4 பேரும் நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்தனர்.

ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனை யடுத்து அவர்களது பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து விசாரித்தனர். ஆனால் அவர்கள் 4 பேரும் நேற்று பள்ளிக்கே வர வில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனை யடுத்து அந்த வகுப்பு மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

ஆனால் அவர்களும் தங்களுக்கு தெரியாது என தெரிவித்து விட்டனர். இரவு வரை வீடு திரும்பாததால் அவர்கள் கடத்தப்பட்டா ர்களோ என்ற அச்சத்தில் மாணவிகளின் பெற்றோ ர்கள் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் திரண்டு வந்து புகார் அளித்தனர்.

ஆனால் மாணவிகள் 4 பேரும் கரூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி. மூலம் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் தெரி விக்கப்பட்டது. கரூர் பஸ்நிலையத்தில் இருந்த 4 மாணவிகளையும் திண்டு க்கல் நகர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் மற்றும் அனைத்து மகளிர் போலீசார் மீட்டு வந்தனர்.

இது குறித்து மாணவி களிடம் விசாரித்ததில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தாங்கள் எங்காவது வெளியே செல்லலாம் என முடிவெடுத்ததாகவும் அதன்படி 4 பேரும் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாகவும் கூறினர். அதன் பிறகு திண்டுக்கல் செல்வதற்காக பழனி பஸ் நிலையத்திற்கு வந்த போது திண்டுக்க ல்லுக்கு பஸ் இல்லாததால் அங்கிருந்த கரூர் பஸ்சில் ஏறியதாக கூறினர்.

பின்னர் வழி தெரியாமல் தவித்த தங்களுக்கு அங்கிருந்த போலீசார் உதவி செய்து அனுப்பி வைத்ததாக வும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு 4 மாணவிகளுக்கும் ஆலோ சனைகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவிகள் பெற்றோர் மற்றும் ஆசிரி யர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறும் போது சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அவர்கள் எடுத்து கூறினர்.

இனி இது போன்ற சம்பவங்களில் ஈடுபட க்கூடாது எனவும் அறிவுரை கள் கூறி அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படை த்தனர். இதனால் மாணவி களின் பெற்றோர்களும் நிம்மதியடைந்தனர்.

Tags:    

Similar News