உள்ளூர் செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அறிவிப்பு

Published On 2023-09-20 15:42 IST   |   Update On 2023-09-20 15:42:00 IST
  • ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.
  • பட்டாசுகள் வெடித்தல், மாலை அணிவித்தலை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும்

அரூர், 

தருமபுரி மாவட்டம் கடத்தூர் மற்றும் மொரப் பூரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலா ளருமான பழனியப்பன் தலைமையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் பேசியதாவது :-

தருமபுரி கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட காரிமங்கலத்தில் இம் மாதம் 26-ம் தேதி, தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தி.மு.க இளைஞரணி செயலரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தருகிறார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க இளைஞர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும்திரளாக பங்கேற்று சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இந்த விழாவில், பட்டாசுகள் வெடித்தல், மாலை அணிவித்தல் உள்ளிட்டவைகளை கட்சித் தொண்டர்கள் தவிர்க்க வேண்டும். மாறாக, அதிக அளவில் புத்தகங்கள் வழங்க வேண்டும், புத்த கங்கள் வழங்குவதால் எதிர்கால மாணவர்களுக்கு பயன்படும்.

தருமபுரி மாவட்டத்தில் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க வேண்டும் என்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், வர்த்தகர் அணி மாநில துணைச் செயலர் சத்தியமூர்த்தி, மாநில தீர்மான குழு துணை செயலர் கீரை விசுவநாதன், ஒன்றிய செயலாளர்கள் செங்கண்ணன், ரத்தின வேல், ஆர் வேடம்மாள், சௌந்தரராசு, சந்திர மோகன், முத்துகுமார், நகர செயலர் முல்லை ரவி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவகுரு, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News