உள்ளூர் செய்திகள்

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 6 மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2023-06-04 00:12 GMT   |   Update On 2023-06-04 05:22 GMT
  • காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 6 மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • மீட்கப்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

ஒடிசாவில் இருந்து 131 பயணிகள் சிறப்பு ரெயிலில் இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தனர். அவர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

இந்நிலையில், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஒடிசாவுக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 6 மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் வந்தவர்களில் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 8 பேர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

யாருக்கும் தீவிர சிகிச்சைக்கான பெரிய பாதிப்புகள் இல்லை.

305 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். 205 படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை என தெரிவித்தார்.

Tags:    

Similar News