உள்ளூர் செய்திகள்

தேனியில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு மரக்கன்றுகளை அமைச்சர் இ.பெரியசாமி நட்டு வைத்தார். அருகில் வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் பலர் உள்ளனர்.

வேளாண் வளர்ச்சியில் முன்னேற்றத்தை கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தி வருகிறது அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு

Published On 2022-11-15 09:17 IST   |   Update On 2022-11-15 09:17:00 IST
  • வேளாண் விளை பொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் கூட்டுறவு கொடியை அமைச்சர் இ.பெரியசாமி ஏற்றி வைத்தார்.
  • கட்டுரைப்போட்டி, ஓவியம், பேச்சுப்போட்டி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கால்நடைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கும் முகாம், கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்றார்.

தேனி:

தேனி மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு வேளாண் விளை பொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் கூட்டுறவு கொடியை அமைச்சர் இ.பெரியசாமி ஏற்றி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், கூட்டுறவு வாரவிழா வருகிற 20-ந் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு இயக்க வளர்ச்சியில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்கள் பல்வேறு மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்தும் இந்த சங்கங்கள் மூலம் பிற இடு பொருட்களை வழங்கியும் மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கட்டுரைப்போட்டி, ஓவியம், பேச்சுப்போட்டி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கால்நடைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கும் முகாம், கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்றார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், அல்லிநகரம் நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News