உள்ளூர் செய்திகள்

உடைக்கற்கள் வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள காட்சி.

அய்யலூர், குஜிலியம்பாறை பகுதியில் கல்குவாரிகள் மூலம் கனிம கொள்ளை

Published On 2023-04-17 13:11 IST   |   Update On 2023-04-17 13:11:00 IST
  • அய்யலூரிலிருந்து எரியோடு செல்லும் சாலையில் மலையைக் குடைந்து பாறைகள், கற்களை எடுத்துச் செல்கின்றனர்.
  • குஜிலியம்பாறை, பாளையம் பகுதியில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், குஜிலியம்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான இடங்களில் அனுமதியின்றி இரவோடு இரவாக கற்கள் உடைத்து எடுத்துச் செல்லப்படுகின்றன. அய்ய லூரிலிருந்து எரியோடு செல்லும் சாலையில் மலையைக் குடைந்து பாறைகள், கற்களை எடுத்துச் செல்கின்றனர்.

இதுமட்டுமின்றி அனுமதி சீட்டே இல்லாமல் செம்மண், நீர்நிலைகளில் மண் எடுக்கப்படுகிறது. இதனால் குஜிலியம்பாறை, பாளையம் பகுதியில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அதிகாரிகள் இங்கு அதிரடி சோதனை நடத்த வேண்டும். கனிம கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News