உள்ளூர் செய்திகள்

விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசினார்.

பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடக்கவிழா; கலெக்டர் பங்கேற்பு

Published On 2023-01-30 09:22 GMT   |   Update On 2023-01-30 09:22 GMT
  • இச்சங்கமானது இதோடு மட்டுமல்லாமல் மென்மேலும் வளரவேண்டும்.
  • இவ்வாய்ப்பை பயன்படுத்தி வாழ்விலும், பொருளாதாரத்திலும் வெற்றி பெற வேண்டும்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் ஆதிதிராவிடர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் துவக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். விழாவில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பேசியதாவது:-

நாகப்பட்டினம் மாவட்ட த்தில் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மக்களுக்காக உருவாக்கப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கமாகும். இந்த பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆதிதிராவிடர் மக்களுக்காக மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்குமான ஒரு நல்ல தொடக்கமாகும்.

இச்சங்கமானது இதோடு மட்டுமல்லாமல் மென்மேலும் இது வளரவேண்டும்.

கொங்கு மண்டலத்தில் இருக்கும் மக்கள் விவசாயம் மட்டுமின்றி பால் உற்பத்தியிலும் தங்களது உழைப்பின் மூலம் கணிசமான வருவாயை பெருக்கி வருகின்றனர்.

அவர்களை போன்று தாங்களும் தங்களது உழைப்பில் முழு ஈடுபாட்டோடு கவனம் செலுத்தி பால் உற்பத்தியை பெருக்கி தங்களது வாழ்வில் முன்னேற வேண்டும்.

கடந்த மாதம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரத்தில் பால் குளிரூட்டும் கருவி அமைக்கப்ட்டது.

எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கும், பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகின்றது.

பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி வாழ்விலும், பொருளாதாரத்திலும் வெற்றி பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாநில ஆத்மா திட்டக்குழு உறுப்பினர் மகாகுமார், ஒன்றியக் குழுத்தலைவர் தமிழரசி, பேரூராட்சித் தலைவர் செந்தமிழ்ச்செல்வி, முன்னாள் பேருராட்சி மன்ற தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News