உள்ளூர் செய்திகள்
ஓசூரில் பால் முகவர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
- தனியார் கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு சங்க தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கி பேசினார்.
- கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
ஓசூரில், அனைத்து பால் முகவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஓசூரில் தனியார் கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு சங்க தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கி பேசினார்.
பொருளாளர் சதீஷ், துணைத்தலைவர் விஜயபாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். செயலாளர் வேடியப்பன் வரவேற்றார்.
இதில் சங்க வளர்ச்சி மற்றும் முகவர்களின் பிரச்சினைகள், குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், மூத்த உறுப்பினர்கள் முத்து, முத்துசாமி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கி பேசினர்.
இதில், துணை செயலாளர்கள் நாகராஜ், மஞ்சு, கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் ஜீவா நன்றி கூறினார்.