உள்ளூர் செய்திகள்

மெட்ரோ ரெயில் 2-வது திட்டம்: தண்டவாளங்கள் அமைக்க ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

Published On 2023-01-12 15:43 IST   |   Update On 2023-01-12 15:43:00 IST
  • சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடங்கள் 3 மற்றும் 5-ல் தண்டவாளங்களை அமைக்க ரூ.163.31 கோடி மதிப்பில் ஒப்பந்தமானது.
  • செப்டம்பர் 2023 மற்றும் பிப்ரவரி 2025-க்கு இடையில் தண்டவாளங்கள் 3 அடுக்குகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடங்கள் 3 மற்றும் 5-ல் தண்டவாளங்களை அமைக்க ரூ.163.31 கோடி மதிப்பில் ஒப்பந்தமானது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கட்டம்-2-ல் வழித்தடங்கள் 3 மற்றும் 5-ல் பயன்படுத்த 60 கிலோ எச்எச் 1080 தரத்தில் தண்டவாளங்களை அமைப்பதற்காக ஜப்பானில் உள்ள மிட்சி அண்ட் கோ நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை ரூ.163.31 கோடி மதிப்பீட்டில் வழங்கியுள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் த. அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் தலைமை பொது மேலாளர் ஹாஜிம் மியாகே மிட்சி அண்ட் கோ நிறுவனம் ஜப்பான் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அமைக்கப்பட வேண்டிய தண்டவாளங்களின் மொத்த அளவு 13885 மெட்ரிக் டன். சோதனை நடைமுறையுடன் கூடிய தண்டவாளங்களின் உற்பத்தி ஏப்ரல் 2023 முதல் தொடங்க உள்ளது. செப்டம்பர் 2023 மற்றும் பிப்ரவரி 2025-க்கு இடையில் தண்டவாளங்கள் 3 அடுக்குகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தண்டவாளங்கள் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 3-ல் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மற்றும் வழித்தடம் 4- ல் மாதவரம் முதல் சி.எம்.பி.டி வரை பயன்படுத்தப்பட உள்ளது என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News