உள்ளூர் செய்திகள்

கோடை காலத்தில் பழங்கள் கெடாமல் பதப்படுத்தும் முறைகள்

Published On 2023-04-12 11:04 GMT   |   Update On 2023-04-12 11:04 GMT
  • பழங்கள் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
  • கோடை காலத்தில் தர்பூசணி, திராட்சை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி போன்ற பழங்கள் அதிக சேதம் அடைகின்றது.

திருவாரூர்:

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியை சோ.கமலசுந்தரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

பழங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை.

நமது உடலுக்கு தேவையான வைட்டமின்கள் என்று சொல்லப்படும் உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புகளை நாம் பழங்கள் உண்பதன் மூலம் பெற முடியும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் குறைந்தபட்சம் 150 கிராம் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவித்துள்ளது.

பழங்கள் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

உற்பத்தி செய்யப்பட்ட பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் போது அவற்றின் விலை அதிகமாக காணப்படுகிறது.

மேலும் சரியான சேமிப்பு கிடங்கு வசதிகள் இல்லாததால் சந்தைக்கு விற்பனைக்காக வரும்போது அவற்றின் தன்மை குறைந்துவிடுகிறது.

மேலும் கோடை காலத்தில் தர்பூசணி, திராட்சை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி போன்ற பழங்கள் அதிக சேதம் அடைகின்றது. பழச்சாறு உள்ளிட்ட பானங்கள் வடிகட்டிய பழகூலுடன், சர்க்கரை, சிட்ரிக் அமிலம் சேர்த்து தயார் செய்வதன் மூலம் பானங்களை கெடாமல் வைத்திருக்க முடியும்.

இதற்கான பயிற்சிகள் அனைத்தும் வேளாண்மை அறிவியல் நிலையத்தால் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு வேளாண் விளைப்பொருட்களுக்கு ஏற்றவாறு பல்வேறு தொழில்நுட்பங்கள் கற்று தரப்படுகின்றது.

ஆர்வமுள்ளவர்கள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News