உள்ளூர் செய்திகள்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு மதுபாட்டில்களோடு மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள்.

கலெக்டர் அலுவலகத்திற்கு மதுபாட்டிலுடன் மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சியினர்

Published On 2023-05-29 10:09 GMT   |   Update On 2023-05-29 10:09 GMT
  • தமிழகத்தில் சமீபத்தில் கள்ளச்சாராய விற்பனை சட்ட விரோதமாக நடைபெற்று வந்தது.
  • டாஸ்மாக் கடைகளை கள்ளு கடைகளாக மாற்றி விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாரந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர்.

அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி தலைமையில் நிர்வாகிகள் வந்தனர்.

திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை கையில் எடுத்து மனு கொடுக்க புறப்பட்டனர். உடனடியாக பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மதுபாட்டில்களோடு மனு கொடுக்க அனுமதி கிடையாது என எச்சரித்தனர்.

இதனைத் தொடர்ந்து கார்த்தி தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

தமிழகத்தில் சமீபத்தில் கள்ள சாராயம் விற்பனை சட்ட விரோதமாக நடை பெற்று வந்தது. கள்ளச்சாராயம் குடித்ததில் 22-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மேலும் சில இடங்களில் போலி மதுபா னத்திற்கு அவ்வப்போது பலியாகி வரும் சம்பவம் நடந்து வருகிறது.

இதனால் தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியில் முக்கிய கோரிக்கையான பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

டாஸ்மாக் கடைகளைகள்ளு கடைகளாக மாற்றி பனை மற்றும் தென்னை விவசாயிகளுக்குகள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News