உள்ளூர் செய்திகள்

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை எண்ணும் காட்சி.

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ.50.98 லட்சம் உண்டியல் வசூல்

Published On 2022-07-22 09:08 GMT   |   Update On 2022-07-22 09:08 GMT
  • மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ.50.98 லட்சம் உண்டியல் வசூல் வந்துள்ளது.
  • ரூ.50 லட்சத்து 98 ஆயிரத்து 126 ரொக்கமும், 325 கிராம் தங்க நகைகளும், 660 கிராம் வெள்ளிப் பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்

மேல்மலையனூர்:

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகளை மாதந் தோறும் எண்ணுவது வழக்கம். அதன்படி நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்ம லையனூர் ஜீவானந்தம், விழுப்புரம் விஜயராணி, துணை ஆணையர் சிவலிங்கம், ஆய்வாளர் சங்கீதா, செயல் அலுவலர் திருவக்கரை சிவக்குமார், கோலியனூர் சிவக்குமார், அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் பூசாரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ.50 லட்சத்து 98 ஆயிரத்து 126 ரொக்கமும், 325 கிராம் தங்க நகைகளும், 660 கிராம் வெள்ளிப் பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் இந்தியன் வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News