உள்ளூர் செய்திகள்
திருத்தணியில் மருந்து கடையை உடைத்து கொள்ளை
- திருத்தணி சித்துார் சாலையில் மருந்து கடை நடத்தி வருகிறார்.
- கொள்ளை சம்பவம் தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்தணி:
திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் திருத்தணி சித்துார் சாலையில் மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு விற்பனை முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிச்சென்றார்.
இந்தநிலையில் நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ. 35 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த மருந்து, மாத்திரைகளை அள்ளிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.