உள்ளூர் செய்திகள்

மருத்துவ உபகரணங்கள் வழங்கிய போது எடுத்த படம்


சாம்பவர்வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் - பேரூராட்சி தலைவி வழங்கினார்

Published On 2022-11-01 09:02 GMT   |   Update On 2022-11-01 09:02 GMT
  • உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும் கருவி மற்றும் ரத்த அளவு பார்க்கும் கருவிகள் பேரூராட்சி தலைவி சீதாலட்சுமி முத்து வழங்கினார்.
  • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்காக கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சாம்பவர்வடகரை:

சாம்பவர் வடகரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும் கருவி மற்றும் ரத்த அளவு பார்க்கும் கருவிகளை தனது சொந்த செலவில் பேரூராட்சி தலைவி சீதாலட்சுமி முத்து வழங்கினார்.

அவர் கூறும் போது, முதல்-அமைச்சரின் மகத்தான திட்டங்களில் ஒன்றான மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள வயதான முதியவர்கள் மற்றும் நீரழிவு நோயாளிகள் பயன்பட்டு வருகின்றனர். கர்ப்பிணிப் பெண்களின் தேவையற்ற அலைச்சலை குறைக்கும் பொருட்டு சாம்பவர் வடகரை பேரூராட்சி பொதுமக்களின் கோரிக்கையான அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்தப் பரிசோதனை நிலையம் அமைக்கவும், கர்ப்பிணிப் பெண்களுக்காக கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும் தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியின் போது சாம்பவர் வடகரை பேரூர் செயலாளர் முத்து மற்றும் மருத்துவர் முத்து பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News