உள்ளூர் செய்திகள்
முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
வேப்பனப்பள்ளியில் மருத்துவ முகாம்
- மருத்துவ முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கான அனைத்துநோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது.
- 250-க்கும் மேற்பட்டோர் சுற்றுவட்டார 30 கிராமங்களில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள ராமச்சந்திரம் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரோஜினி பரசுராமன், கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் ரகுநாத், வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், சுகாதார ஆய்வாளர் உமா சங்கர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களின் கண், காது, மூக்கு, தலை, வயிறு மற்றும் இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான அனைத்துநோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது.
இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் 250-க்கும் மேற்பட்டோர் சுற்றுவட்டார 30 கிராமங்களில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.