உள்ளூர் செய்திகள்
தலைஞாயிறில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை- பேரூராட்சி தலைவர் உறுதி
- கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
- பேரூராட்சி இளநிலை உதவியாளர் குமார் வரவேற்றார்.
வேதாரண்யம்:
தலைஞாயிறு பேரூராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சை யின் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி துணைத்தலை வர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பேரூராட்சி இளநிலை உதவியாளர் குமார் அனைவரையும் வரவேற்றார்.கூட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினர். பின்னர், அதற்கு பதிலளித்து பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையின் பேசுகையில்:- குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.