உள்ளூர் செய்திகள்

கொள்ளையடிக்கப்பட்ட வீடு.

பண்ருட்டி அருகே சேமக்கோட்டையில் முகமூடி கொள்ளை:2.5 பவுன் தாலி சரடு பறிப்பு

Published On 2023-04-27 13:29 IST   |   Update On 2023-04-27 13:29:00 IST
  • முகமூடி அணிந்து வந்த மர்நபர் உடல் முழுவதும் எண்ணெய் தடவி கொண்டு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்தார்.
  • புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த சேமகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் அருள்பாண்டியன். இவர் வெளிநாட்டில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா (23). இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக தூங்கி கொண்டு இருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த மர்நபர் உடல் முழுவதும் எண்ணெய் தடவி கொண்டு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்தார். பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு, உறங்கி கொண்டிருந்த சந்தியாவின் 2.5 பவுன் தாலி சரடை அறுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து சந்தியா அளித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். கடலூரிலிருந்து மோப்ப நாய், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

Tags:    

Similar News